ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பெயரில் போலி இணையதளம் ஆர்.பி.ஐ. எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      இந்தியா
Reserve Bank 2017 01 18

மும்பை: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலியாக இணையதளம் ஒன்று செயல்படுவதாக பொதுமக்களுக்கு ஆர்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, www.indiareserveban.org என்ற முகவரியில் இயங்கி வரும் இந்த இணையதளம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஆன்லைன் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க என்ற லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடும் வகையில் இந்த இணையதளம் செயல்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி நபர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை திரட்டி அதன் மூலம் மோசடி செய்யும் கும்பலால் இந்த இணையதளம் செயல்பட்டு வருவதாகவும், எந்த காரணத்துக்காகவும், தனி நபர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை ஆர்.பி.ஐ எப்போதும் கேட்காது என்பதை தெளிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து