விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்ற புதிய கவுன்ட்டர்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      தமிழகம்
dollar 2018 02 09

சென்னை, வெளிநாட்டு பணத்தை மாற்றிக்கொள்ள வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக வெளிநாட்டு பணத்தை மாற்றக்கூடிய தனி கவுன்ட்டர்களை விரைவில் திறக்கவுள்ளோம். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பணத்தை இந்த கவுன்ட்டர்கள் மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதனால் பயணிகளின் அலைச்சலும் குறையும்” என்றார்.

தனியார் நிறுவனத்தின் இயக்குநர் கே.எல்.அருண் கூறியபோது, ‘‘அன்னிய செலாவணி மாற்றுவதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, வரும் 26-ம் தேதி புதிய கவுன்ட்டரை திறக்கவுள்ளோம். இங்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட 70 நாடுகளின் அன்னிய செலாவணியை மாற்றிக் கொள்ள முடியும். இதுதவிர, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள சிம்கார்டுகளையும் வழங்கவுள்ளோம். இந்த சேவைகளுக்கு, மற்ற இடங்களில் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்கப்படும்‘‘ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து