ஆவடி ராணுவ சீருடை தொழிற்சாலைக்கு மூடுவிழாவா: மத்திய அரசுக்கு ச.ம.க. கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      தமிழகம்
Sarath-Kumar 2017 03 02

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலையை மூடக்கூடாது என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து விட்டு, மறுபுறம் இப்படி ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை பறிக்க நினைப்பது கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே, ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவை கைவிடவேண்டும். - சரத்குமார்

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை எடுத்திருக்கும் கொள்கை முடிவுகளால், தமிழகத்தில் உள்ள ஆவடியில்ராணுவ படையினருக்கான உடை தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முப்படை வீரர்களின் தேவைக்கேற்ற ராணுவ சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகள், கூடாரங்கள், பாராசூட்கள் போன்றவற்றை, ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் இத்தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

மேலும் மத்திய ரிசர்வ் படைக்கும் தேவையான சீருடைகளையும், கஜகஸ்தான், ஐ.நா.சபை ராணுவ வீரர்கள் என வெளிநாடுகளுக்கும் சீருடைகள் தயாரித்துத் தந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இத்தொழிற்சாலையை மூட நினைப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து விட்டு, மறுபுறம் இப்படி ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை பறிக்க நினைப்பது கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே, ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவை கைவிடவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து