பா.ஜ.கவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்க சோனியா காந்தி அழைப்பு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      இந்தியா
sonia gandhi(N)


புதுடெல்லி: அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க புதிய கூட்டணியை அமைக்க சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் தன் கட்சி எம்.பி.க்களிடையே பேசிய சோனியா காந்தி கூறியதாவது,
நமது கட்சியின் வெற்றி வாய்ப்புகளை புதுப்பித்துக் கொள்வதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கி விட்டது. விரைவில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளதை நிரூபிக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயரை மோடி அரசு புதிதாக மாற்றி விட்டது. இது அதிகபட்ச விளம்பரம் - குறைந்தபட்ச ஆட்சி நிர்வாகம் என்ற விளையாட்டாகவே தோன்றுகிறது.மோடி அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை நமது கட்சிக்கான ஆதரவாக மாற்ற முயற்சிக்க வேண்டும். -
- சோனியா காந்தி

மத்தியில் ஆளும் மோடி அரசானது நாட்டின் யதார்த்த நிலையை உணரவில்லை. இது மக்களவையில் பிரதமர்  ஆற்றிய உரையில் இருந்து நிரூபணமாகியுள்ளது.குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டி விடுகிறது. இதை நாம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற உத்தரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் கண்டோம். அடுத்த சில மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநிலத்திலும் இதை நாம் காணும் நிலை ஏற்படலாம்.

மோடி அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயகத்தின் அடிப்படைகளாக விளங்கும் நாடாளுமன்றம், நீதித்துறை, ஊடகங்கள், சமூல நல அமைப்புகள் ஆகியவை தாக்குதலுக்கு ஆளாகின. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயரை மோடி அரசு புதிதாக மாற்றி விட்டது. இது அதிகபட்ச விளம்பரம் - குறைந்தபட்ச ஆட்சி நிர்வாகம் என்ற விளையாட்டாகவே தோன்றுகிறது.

எனவே, கட்சித் தலைவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். மேலும், மோடி அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை நமது கட்சிக்கான ஆதரவாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
நாடாளுமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் நான் காங்கிரஸ் தலைவர் மற்றும் மற்ற சகாக்களுடன் இணைந்து அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைவதையும், இந்தியா ஜனநாயக ரீதியிலான அனைவரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற, பொருளாதார, முன்னேற்றப் பாதையில் செல்வதையும் உறுதிப்படுத்த நான் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவேன் என்றார் சோனியா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து