நத்தம் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 578 மாடுகள் பங்கேற்பு... 53 பேர் காயம்.

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
natham jallikkatu 9 2 18

 நத்தம்.-   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டியில் உத்திரிய மாதா திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல்திருச்சி,தேனி,மதுரை போன்ற மாவட்டங்கலிருந்து 578 காளைகளும், 600 மாடுபிடிவீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடிவீரர்களுக்கு பிடியில் சிக்காமல் துள்ளி சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. மதுரை –சென்னை விமான டிக்கெட்சைக்கிள்அண்டா,பேன் , தங்க காசுகள் , கட்டில்பீரோ என 3 இலட்சம் வரையிலான பரிசுகள் வழங்கபட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 38 மாடுபிடி வீரரகளும், 15 பார்வையாளர்கள் உட்பட 53 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த  11 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். கொசவபட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பிற்க்காக 400க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 5 மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து