கீழ்வேளுர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கட்டுமான பணிகள்

 கீழ்வேளுர் ஒன்றியம் அகரக்கடம்பனூர் ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் (2016-2017) கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகளையும், பசுமை வீடுகள் திட்டத்தின் (2017-2018) கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பசுமை வீட்டின் கட்டுமானப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்(2017-2018) கீழ் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணிகளையும், கோகூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்(2017-2018) கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வெட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தினையும் மாவட்ட கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார், பார்வையிட்டார்.

 இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், அன்பரசு, பொறியாளர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து