முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி-4க்கான தேர்வில் பதிலளிக்காத கேள்விகள் எத்தனை என்பதை குறிக்க குறிப்பிட்ட நேரத்தைவிட 5 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது : கலெக்டர் கு.கோவிந்தராஜ் தகவல்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      கரூர்
Image Unavailable

 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4க்கான தேர்வை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று (09.02.2018) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.

கலெக்டர் பேட்டி

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4க்கான தேர்வில் இந்த முறை முதல்முறையாக 5 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பதை குறிப்பிட மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வு எழுத கரூர் பேருந்து நிலையம் மூலம் பல்வேறு மையங்களுக்கு செல்பவரின் வசதிக்காக தகவல் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் சார்பாக உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கு கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்படும். 10.45 மணிக்குள் தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை தேர்வு மைய கண்காணிப்பாளர் மூலம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் புதிய மென்பொருள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. தேர்வு மையங்கள் முழுமையாக வீடியோ பதிவு மூலம் காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வருவோரின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல பேருந்து வசதி மற்றும் தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அவரவர் பணியை சிறப்பாக செய்து தேர்வை நல்லபடியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன் (பொ), துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பராஜா (கரூர்), முத்துகருப்பன் (குளித்தலை), வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் பாஸ்கரபாண்டியன், உள்ளீடு, வெளியீடு மேற்பார்வையாளர் தமிழரசன் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து