46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்துபந்து போட்டி இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது: கலெக்டர் கந்தசாமி பரிசு வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
photo05

திருவண்ணாமலையில் நடந்த 46வது தேசிய மகளிர் சீனியர் கையுந்து பந்து போட்டியில் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் 46வது தேசிய அளவிலான மகளிர் சீனியர் கையுந்துபந்து போட்டி கடந்த 3ந் தேதி முதல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, பீகார், ஹரியானா, ஜார்கண்ட், ராஜஸ்தான், மணிப்பூர், குஜராத் உள்பட 26 மாநிலங்களிலிருந்து 26 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

சாம்பியன்

இதன் இறுதி போட்டி நேற்று முன்தினம் மாலை நடந்தது. இப்போட்டியில் இந்தியன் ரயில்வே அணியும் இமாச்சல பிரதேச அணியும் மோதின. இதில் 27-25 கோல் கணக்கில் இந்தியன் ரயில்வே அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இமாச்சல பிரதேச அணி 2வது இடத்தையும் தமிழ்நாடு, ஹரியானா அணிகள் 3வது இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா அன்றிரவு நடந்தது.

இதில் தி.மலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு கோப்பை மற்றும பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாடு அலுவலர் ஜெயக்குமாரி தமிழ்நாடு கையுந்து பந்து சங்க தலைவர் இராமசுப்பிரமணி செயலாளர் சரவணன் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கராஜன் உட்ற்கல்வி ஆய்வாளர் முனியன் மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளர் முனுசாமி உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ் சரவணன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற்ற மகளிர் கையுந்து பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 3வது இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து