வட கொரியா ராணுவ தலைவர் திடீர் பணி நீக்கம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      உலகம்
vadakoria 2018 01 10

சியோல்: வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றது முதலாக, அதற்கடுத்த உயர் பதவியான ராணுவ தலைவர் பதவியை வாங் பியாங் வகித்து வந்தார்.

இந்நிலையில், அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில ஒப்பந்தங்கள் தொடர்பாக வாங் பியாங் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து வாங் பியாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியை ராணுவ அமைச்சராக இருக்கும் கிம் ஜாங் காக் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து