நயன்தாராவை இயக்குவது குறித்து மனம்திறந்த சர்ஜூன்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      சினிமா
Nayanthara

Source: provided

`லட்சுமி', `மா' குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம். அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பது குறிப்பது மனம் திறந்து பேசினார்.

`லட்சுமி', `மா' குறும்படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சர்ஜுன்.கே.எம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை `கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து இயக்குனர் சர்ஜுன் பேசுகையில், ''வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு குறும்படங்கள் நல்ல பாதையாகும். எனது முதல் படமான `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எனது `மா' குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இந்நிலையில் `கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்' ராஜேஷ் அவர்கள், எனக்கு போன் செய்து என்னிடம் ஏதாவது சுவாரஸ்யமான கதையுள்ளதா என கேட்டார். உடனே நான் தயார் செய்துள்ள ஒரு கதையை அவரிடம் சொன்னேன். அது நயன்தாரா மேடமுக்காக என்பது எனக்கு அப்பொழுது தெரியாது.

பிறகு அவர் என்னிடம் இக்கதையை நயன்தாரா மேடமும் கூற சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான திகில் படம். கதையை கேட்டு மிகவும் ரசித்தார்.

இந்த கதையை நான் எழுதியபொழுது ஒரு பெரிய நடிகர் இதில் நடித்தால் மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். தற்போது நயன்தாரா மற்றும் அருமையான நடிகர் கிடைத்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

எனது `மா' குறும்படத்தை அவர் பார்த்ததாகவும், அதன் கதையும் மற்றும் அதனை எடுத்த விதமும் அவருக்கு பிடித்திருந்ததாகவும் கூறினார். நயன்தாரா - தயாரிப்பாளர் ராஜேஷ் என் மீதும், எனது கதையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் ஒரு தரமான படத்தை தந்து காப்பாற்றுவேன்'' என்றார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து