முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் மரணம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சந்திரசேகர் ரத் காலமானார். அவருக்கு வயது 89.
ஒடிசா இலக்கிய எழுத்தாளர் சந்திரசேகர் ரத் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்திரசேகர் ரத்திற்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 1929 -ம் ஆண்டு பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள மலப்படா கிராமத்தில் அக்டோபர் 17- ம் தேதி பிறந்தார் சந்திரசேகர் ரத். அவருக்கு மத்திய அரசு இந்தாண்டுக்கான பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்தது. மறைந்த ரத் தனது இலக்கிய படைப்புகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

கேந்த்ர சாஹித்ய அகாடமி, ஒடிசா சாஹித்ய அகாடமி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

ரத்தின் மறைவுக்கு ஒடிசா கவர்னர் ஜாமீர் இரங்கல் தெரிவித்துள்ளார். ரத்தின் இழப்பு ஒடிசா இலக்கியத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரத்தின், உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ரத் தனது ரசிகர்களால் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்றும் நவீன் பட்னாயக் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து