முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'விசுவாசம்' அப்டேட்: அஜித்துடன் முதல் முறையாக இணையும் இமான்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided

விசுவாசம்' படத்துக்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித்- இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'விசுவாசம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கிறார்.

'விசுவாசம்' படத்திற்காக இயக்குநர் சிவா - யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது.

மீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், நான் 'விசுவாசம்' படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது என்று சாம் தெரிவித்தார்.

இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. 2018 தீபாவளிக்கு 'விசுவாசம்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து