முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி : முதல்வர் சித்தராமையா தகவல்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.  ---- சித்தராமையா

இதுகுறித்து தாவணகெரேவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக உள்ளார். ஆனால், காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ம.ஜ.தவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறித்தும் எனக்கு தெரியாது. வரும் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதிய உணவுத் திட்ட ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து