முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு திருப்பதியில் 2 பிரம்மோற்சவம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, திருப்பதியில் ஆண்டுதோறும் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு தெலுங்கு பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாதத்திலும் ஒரு பிரம்மோற்சவம் நடக்கிறது.

தெலுங்கு பஞ்சாங்க வழக்கப்படி அமாவாசை முடிந்த மறுநாள் தெலுங்கு மாதப்பிறப்பு நிகழ்கிறது. அவ்வாறு அமாவாசைக்கு மறுநாள் மாதப்பிறப்பு தொடங்குவதால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுக்கு 12 மாதங்களை காட்டிலும் கூடுதலாக 31 நாட்கள் வருகின்றன. அவ்வாறு வரும் 21 நாட்களை அதிக மாதமாக தெலுங்கு பஞ்சாங்கம் கணக்கிடுகிறது. இந்த நிலையில் 12 மாதங்களுக்கு ஒரு முறை வைகானாச ஆகம விதிப்படி திருப்பதியில் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 மாதங்களை காட்டிலும் அதிக மாத நாட்கள் வருவதால் அப்போது 2 பிரம்மோற்சங்களை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிறக்கவுள்ள ஹேவிளம்பி தெலுங்கு புத்தாண்டு அதிக நாட்களாக வருகிறது. அதனால் இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் அதிக மாத நாள் பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவங்கள் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து