முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

கூகுள் நிறுவனத்துக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.136 கோடி அபராதம் விதித்துள்ளது. இணைய தேடுதல் மற்றும் விளம்பரங்களைத் தேடுவதில் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையமும் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தேடுபொறியில் பாரபட்சம் காட்டப்படுவதாக பாரத் மேட்ரிமோனி டாட் கம் நிறுவனம் மற்றும் ஒரு நுகர்வோர் அமைப்பும் 2012-ம் ஆண்டில் புகார் அளித்ததன் அடிப்படையில் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து