மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி: அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      நாமக்கல்
3

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று (10.02.2018) நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்.பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தாநத்தம் ஊராட்சியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரியானூர் சாலை முதல் கூத்தாநத்தம் பஞ்சாயத்து எல்லை வரையிலும், கருமனூர் ஊராட்சியில் ரூ.10.28 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரியனூர் சாலை முதல் செம்பாம்பாளையம் சாலை வரையிலும், இதே ஊராட்சியில் ரூ.10.32 லட்சம் மதிப்பீட்டில் வெங்கமேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை புதுபிக்கும் பணியினை அமைச்சர்பி.தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

தார் சாலை பணி

இதனைத் தொடர்ந்து மல்லசமுத்திரம் பேரூராட்சி, வார்டு எண்:1-க்குட்பட்ட நந்தவனத்தெருவிலும், வார்டு எண்:3-க்குட்பட்ட வ.ஊ.சி தெருவிலும், வார்டு எண்:4-க்குட்பட்ட டாக்டர் சுப்பராயன்ரோடு சந்து-1, டாக்டர் சுப்பராயன்ரோடு சந்து-2, டாக்டர் சுப்பராயன்ரோடு சந்து-3, வார்டு எண்:5-க்குட்பட்ட கிழக்கு ரதவீதி, வடக்குரதவீதி, தெப்பகுளத்தெரு, வார்டு எண்:6-க்குட்பட்ட மல்லசமுத்திரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்பி.தங்கமணி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், சேலம் - நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் .ஆர்.சின்னுசாமி, பேரூராட்சி துறையின் உதவி செயற்பொறியாளர்.ஆர்.ஜெகதீஸ்வரி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவண்ணாமலை, .புஷ்பராஜ், உதவி பொறியாளர்ஈஸ்வரமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்செல்வராணி, மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர்அப்துல்லா, மல்லசமுத்திரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்மோகன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து