செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 299 மாணவர்களுக்கு பட்டயம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      வேலூர்
chengam photo 1

செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ- சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 6ம் பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமைதாங்கினார். ஸ்ரீ செல்வநாராயண ரெட்டியார் கல்வி அறக்கட்டளை செயலாளர் திலகவதி ரவிக்குமார் பொருளாளர் புனிதாபாலகிருஷ்ணன் உறுப்பினர்கள் அம்பிகாபதி ரேவதி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் பிரமிளாஜெயந்தி வரவேற்று பேசினார்.

 

பட்டயம் வழங்கும் விழா

 

விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு 299 மாணவ மாணவியர்கு பட்டயம் அளித்து பேசினார். அப்போது இன்றைய உலகில் மாணவர்களுக்கு அதிக வாய்புகள் உள்ளன அவற்றை தேடி போகவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும் ஏற்படும் தடைகள் உயர்வுக்கு வழிவகுக்க கூடியதாக உந்துதல் தரக்கூடியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். சில இடங்களில் தான் சில பொருட்கள் அந்தகாலத்தில் விளைந்தன தற்போது எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களும் விளைவிக்கப்படுகிறது. இயற்கையிலேயே இந்த மாற்றத்தை உருவாக்கும்போது மனித வளத்தில் மாற்றங்களை உருவாக்கமுடியும் உலகம் செயற்கைகோல் அறிவியலில் முன்னேறிய பிறகு போட்டியாளர்கள் நமக்கு உலக அளவில் உள்ளன.

வாய்புகள் கிடைத்திட நமது தரம் தகுதியை உயர்த்திகொள்ளவேண்டும். நமது திறமைக்கு ஏற்றவேலை என்பதைவிட இருக்கின்ற வேலைகளுக்கு ஏற்ப நமது திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும் ஆண்டுதோரும் சுமார் 3.5லட்சம் வேலைவாய்புகள் உள்ளன. ஆனால் அந்த அளவிற்கு மாணவர்கள் போட்டிபோடுவது இல்லை நமக்கு வேலைதரும் நிறுவனம் நம்மைவிட திறமைசாலி எதிர்பார்ப்பதில் தவறில்லை முன்னேற்றத்திற்கு திட்டமிடல் சரியானபாதையாகும் தோல்விகளில் துவண்டுவிடக்கூடாது கல்வி கருனை உயர்த்திகொள்ளவேண்டும் போட்டிகளில் நானும் ஓடினேன் என்றில்லாமல் எத்தனையாவதாக வந்தோம் என்பதை நிருபிக்கவேண்டும் உலக நாடுகளில் பல கடந்த 20ஆண்டுகளில் தான் பெரு வளர்ச்சி கண்டுள்ளது நமது குடும்பம் நமது நாடு நமது மக்கள் முன்னேற நாம் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இளம் மாணவர் பருவத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் வென்றவரைத்தான் உலகம் பார்க்கிறது. தோற்றவரிடம் காரணம் கேட்ககூட ஆளில்லை நாம் பொருட்களில் சோப்பு பேஸ்ட் போன்றவற்றில் எக்ஸ்டரா எதிர்பார்ப்பது போல் நாம் வேலைக்கு சேருமிடத்தில் நம்மை விட எக்ஸ்ட்ரா தகுதி உடையவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேம்பாட்டு பயிற்சி

 

எனவே நம் தகுதிகளை முதன்மையாக வரும் அளவு வளர்த்துகொள்ளவேண்டும் இவ்வாறு கலெக்டர் கந்தசாமி பேசினார். மேலும் விழாவில் வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 49 மாணவர்களுக்கு ரூ.2லட்சத்து 28ஆயிரம் ரொக்க பரிசுகளும் சான்றிதழ் கேடயங்களும் மத்திய அரசின் சூரியமித்ரா ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 60 மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்களையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். முடிவில் விரியுரையாளர் சௌமியா நன்றி கூறினார் விழாவில் மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் எக்ஸ்நோரா இந்திரராஜன் தாசில்தார் உதயகுமார் சமூக பாதுகாப்புதிட்ட தாசில்தார் ரேணுகா வட்டார வளர்ச்சி அலுவலர் மணி எழிலன் நாச்சிப்பட்டு கூட்டுறவு வங்கி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி திருவண்ணாமலை தொழில் அதிபர் பாபாமார்பில்ஸ் நகர காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து