இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு உயரிய இடம் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
pm modi 2017 12 31

ரமல்லா : இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒப்பந்தங்கள்...

பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீன நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அங்கு அவர் அந்நாட்டு அதிபர் மகமூத் அப்பாசை சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  இந்த சந்திப்பிற்கு பின்னர் பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார்.

உயரிய விருது ...

இந்த விருதினை பெற்று கொண்ட பின் பிரதமர் மோடி பேசும்பொழுது, பாலஸ்தீனம் இந்தியாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளது.  இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் எனக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது.  பாலஸ்தீனத்துடனான நட்பின் அடையாளம் இந்த விருது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், இந்திய வெளியுறவு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு எப்பொழுதும் உயரிய இடம் வழங்கப்பட்டு உள்ளது.  பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில் சுதந்திர நாடாகி விடும் என்றும் கூறியுள்ளார்.

துணிச்சல் மிக்க...

இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான உறவுகள் நீண்ட காலம் வரை நிலைத்து நின்றுள்ளது.  இந்திய மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே இந்த வருடம் மாணவர்கள் பரிமாற்றம் 50ல் இருந்து 100 ஆக இரட்டிக்கப்படும்.  துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக பாலஸ்தீன மக்கள் உள்ளனர் என கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் ஆவார்.

கிராண்ட் காலர் விருது

பாலஸ்தீன நாட்டின் உயரிய கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.  பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதனை வழங்கினார். இந்த விருது வெளிநாட்டை சேர்ந்த அரசர்கள், தலைவர்கள் மற்றும் அதற்கு இணையான பதவி வகிப்போருக்கு வழங்கப்படும் உயரிய விருது.  கடந்த காலங்களில் சவூதி அரேபிய அரசர் சல்மான், பஹ்ரைன் நாட்டின் அரசர் ஹமாத், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பலருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து