முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரியான திசையில் இந்திய கிரிக்கெட் அணி - ஜாக்கஸ் காலிஸ் பாராட்டு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகனஸ்பர்க : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக்கஸ் காலிஸ் தெரிவித்துள்ளார்.

கவனிக்கவில்லை...

நடப்பு இந்திய- தென்ஆப்பிரிக்க தொடரை பற்றி கேட்டதற்கு, நான் எனது தொழில் தொடர்பான பயணங்களில் பரபரப்பாக இருப்பதால் நடப்பு தொடரை கூர்ந்து கவனிக்கவில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை சொந்த நாட்டுக்கு வெளியிலும் நிறைய வெற்றிகளைப் பெறவேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் தற்போது சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

அபார முன்னேற்றம்...

மேலும், பெங்களூரு அணியில் விராட் கோலியை நீண்டகாலமாக நீங்கள் பார்த்து வருகிறீர்கள். ஒரு கிரிக்கெட் வீரராக, குறிப்பாக ஒரு பேட்ஸ்மேனாக அவரது வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு, விராட் கோலி அபார முன்னேற்றம் கண்டிருக்கிறார். ஐ.பி.எல்.லின் நற்பலன்களில் இதுவும் ஒன்று. ஐ.பி.எல். மூலமாக நிறைய இந்திய இளம் வீரர்கள் பெரிய, சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்புப் பெறுகிறார்கள், அதன்மூலம் பலனும் பெறுகிறார்கள். கோலியைப் பொறுத்தவரை அவரது வளர்ச்சிக்கு ஐ.பி.எல். மட்டும் காரணமல்ல, அது அவரது முன்னேற்றத்தை வேகப்படுத்தியிருக்கிறது. அவரது வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தது, சிறந்த விஷயம்.

புள்ளிவிவரங்களே...

மற்ற உலகத்தர பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிட்டால் விராட் கோலியை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர்., இந்தக் கேள்விக்கு புள்ளிவிவரங்களே பதில் சொல்லும். சொந்த மண்ணில் அவர் சிறப்பான பதிவைப் பெற்றிருக்கிறார். வெளிநாடுகளிலும் அவர், குறிப்பிடத்தக்க அளவு நன்றாகவே விளையாடியிருக்கிறார் என்றார்.

மேலும் அவர் கேப்டன் பொறுப்பை ஓரளவு சிறப்பாகவே கையாளுகிறார். இயல்பாகவே, தலைமைப் பொறுப்பில் அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். சக வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதே தலைமைப் பண்பு. அப்படிச் செய்துவிட்டாலே பாதி வெற்றிதான்.

ஆல்ரவுண்டராக...

ஹர்திக் பாண்ட்யா பற்றி அவர் தெரிவிக்கையில், ஒரு நல்ல ஆல்ரவுண்டர் ஆவதற்கு உரிய திறமை அவருக்கு இருப்பதைப் போலத் தோன்றுகிறது. இளம் வீரரான அவர், நிறைய கற்றுக்கொள்ளலாம், ஓர் உலகத்தரமான ஆல்ரவுண்டராகவும் உருவாகலாம். பாண்ட்யா போன்றவர்கள் சர்வதேச களத்தில் அழுத்தமாக கால் ஊன்றுவதற்கு நீங்கள் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர் இங்கு வசதியாக உணரத்தொடங்கியபிறகு, ஒரு நல்ல பேட்ஸ் மேனாகவோ, பந்துவீச்சாளராகவோ அல்லது ஆல்ரவுண்டராகவோ முன்னேற்றம் காணுவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து