முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணிக்கு 290 ரன்கள் இலக்கு - ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகனஸ்பர்க் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. தனது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாடி ஷிகர்தவான் சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் 3-0 என முன்னிலையில் உள்ளது. 4-ஆவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நேற்று நடைப்பெற்றது. எனவே இதிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடிது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 4 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். 83 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 75 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. இருப்பினும் 100-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷிகர் தவன், சிறப்பாக ஆடி சதமடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 13-ஆவது சதமாகும். இந்நிலையில், அதிக மின்னல் வெளிப்பாடு காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 34.2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவன் 107 ரன்களுடனும், ரகானே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின் போட்டி திரும்ப ஆரம்பித்த நிலையில், ஷிகர் தவான் 109 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்கல் பந்தில் டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் ராகனே 8 ரன்களுடனும், ஷ்ரேஷ் ஐயர் 18 ரன்களுடன் அவுட்டாக கடைசி வரை டோனி அவுட்டாகமல் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து.

290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. முன்னதாக பிங்க் டே அனுஷரிக்கும்  தென் ஆப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது. ஆனால் அதை தடுக்கும் வகையில் இந்திய அணி வெற்றிப் பெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது கிடையாது என்ற நிலையை தகர்த்தெறிந்து வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து