முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய அதிபருடன் கிம்மின் தங்கை சந்திப்பு : வடகொரியாவுக்கு வருமாறு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சியோல் : தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தென்கொரியாவின் பியாங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து தலைநகர் சியோலில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். அப்போது வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபருக்கு அவர் அழைப்பு விடுத்தார். வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தையும் தென்கொரிய அதிபரிடம் அவர் அளித்தார். அதில் இருநாட்டு உறவை மேம்படுத்த அதிபர் கிம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு வடகொரிய குழுவினருக்கு தென் கொரிய அதிபர் சிறப்பு விருந்து அளித்தார்.

முன்னதாக தென்கொரிய அதிபர் மாளிகையின் விருந்தினர் பதிவேட்டில் அதிபர் கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில் “வடகொரியாவும் தென்கொரியாவும் எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பங்கேற்றார். ஆனால் அமெரிக்க துணை அதிபரையோ, அமெரிக்க பிரதிநிதிகளையோ சந்திக்கும் திட்டமில்லை என்று வடகொரிய குழுவின் தலைவர் கிம் யாங் நம் திட்டவட்டமாக அறிவித்தார். விழா மேடையில் துணை அதிபர் மைக் பென்ஸும் வடகொரிய குழுவினரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் இருதரப்பினரும் சந்தித்துப் பேசவில்லை. எனினும் தென்கொரிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கிம் யூ கியோம் கூறியபோது, அமெரிக்கா, வடகொரியா இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்தார். வடகொரியா அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் மேகம் சூழ்ந்தது. ஒலிம்பிக் போட்டியால் தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து