முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் இளைஞர் ஈர்ப்பு முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்; இளைஞர் ஈர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.வெ.கு. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர்.மு.பா. பாலாஜி சிறப்புரை ஆற்றினார்.

அவர்தம் உரையில் “கூட்டுறவு” என்னும் சொல் சேர்ந்து வாழ்வது, சிந்தித்து செயலாற்றுவது என்று பொதுவாகப் பொருள்படும்.  கூட்டுறவு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது.  இது மனிதர்களிடையே உண்டாகும் தொடர்பின் ஒரு பகுதியே ஆகும்.  கூட்டுறவு அமைப்புகளில் பலவகையான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.  ஆவை அனைத்தும் உறுப்பினர்களின் பொருளாதார வாழ்வு உயரவேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டுவருகிறது.  இது மக்களின் இயக்கம்.  இளைஞர்கள் அனைவரும் தாமாகவே இந்த அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.  எந்த ஒருவளர்ச்சிக்கும் கூட்டுறவு அமைப்பு இன்றியமையாத ஒன்று.  மக்களின் துயர்துடைக்கம் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சிகள் 

மாணவப்பருவத்திலேயே கூட்டுறவு அமைப்பினை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற சீரிய நோக்கோடு தான் இந்த இளைஞர் ஈர்ப்பு முகாம் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக விளங்கும் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் கூட்டுறவு மற்றும் வங்கி துறையில் வேலை வாய்ப்பு பெற குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.  அவற்றில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (9 மாதங்கள்), பட்டப்படிப்புகள் (3 வருடங்கள்), பட்ட மேற்படிப்புகள் (2 வருடங்கள்), நகை மதிப்பீடு பயிற்சி (17 நாட்கள், சனி, ஞாயிறு மட்டும்), மற்றும் கணினி பயிற்சிகள் அகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய கல்வியாக அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இவற்றில் சேர்ந்து பயன்பெற வேணுமாய் கேட்டுக் கொண்டார். 

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு பிரச்சார அலுவலர்.கோ. வெங்கடராமன் கூட்டுறவு அமைப்பு மற்றும் கொள்கைகள் வரலாறு ஆகியபற்றி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியர்.என். முகமது ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.  முதுகலை தமிழ் ஆசிரியர். து.பே. அவினாசியப்பன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து