9,351 காலிப்பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு - 17.52 லட்சம் பேர் எழுதினர்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      தமிழகம்
TNPSC Group IV Exams 2018 2 11

சென்னை : 9,351 காலிப்பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் - 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 823 பேர் எழுதியுள்ளனர். மேலும் தேர்வர்களின் விபரம் அடங்கிய விடைத்தாள் வழங்கப்பட்டது.

494 கிராம நிர்வாக அலுவலர், 4,096 இளநிலை உதவியாளர் (பிணையற்றது) , 205 இளநிலை உதவியாளர் (பிணையம்) , 48 வரித்தண்டலர் நிலை- 1 , 74 நில அளவர் , 156 வரைவாளர், 3,463 தட்டச்சர் , 815 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 என மொத்தம் 9351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, குருப் 4 தேர்வு நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெற்றது. . இந்த தேர்வினை எழுதுவதற்கு டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே மிக அதிக அளவான 20 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கவும், தேர்வுப் பணியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. ஆனால் நேற்று காலை 8 மணிக்கு முன்பே ஏராளமானவர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர் அவர்களை சோதனை செய்து தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களுக்கான வசதிகள் செய்துதரப்பட்டு இருந்தன.

இந்த தேர்விற்கான வினாத்தாள் கொள்குறி வகையில் இருந்தது. பொது அறிவில் 75 வினாக்களும், திறனறித் தேர்வு 25 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களும் என 200 வினாக்கள் வைக்கப்பட்டு இருந்தது. 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கபட்டு இருந்தன தேர்வை எழுதுவதற்காக மாநிலம் முழுவதும் 20 லட்சத்து ,69, ஆயிரத்து 274 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 17 லட்சத்து 52 ஆயிரத்து 823 பேர் அதாவது 84.71 சதவீதம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்களை கண்காணிக்க ஒன்றரை லட்சம் பேர் நியமிக்கப்பட்டிருந்தனர், சில மையங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் 1,60,120 தேர்வர்கள், 508 மையங்களில் தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்ட கலெக்டர்  அன்புச்செல்வன் சென்னையில் தேர்வு மையத்தினை நேரில் சென்று பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்த தேர்வில் தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. தேர்வுக் கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்று வரும் பொருட்டு காலை 8 மணிமுதல் மாலை 3 வரை கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இவர்களுக்கான தேர்வு விடைத்தாள் குறிப்புகள் அடுத்த வாரம் வெளியிடுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து