வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியுடன் கை குலுக்குவதை தவிர்த்த அமெரிக்க துணை அதிபர்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      உலகம்
Mike Pence 2018 2 11

சியோல் : தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றுள்ள அமெரிக்க துணை அதிபர் பென்ஸ், கிம்மின் சகோதரியுடன் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டிகள் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 74 வருடங்களுக்கு பின்னர், வடகொரிய அதிபர் கிம்மின் குடும்பத்திலிருந்து அவரது சகோதரி கிம் யோ ஜாங் தென் கொரியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இதில் நேற்று நடத்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன், வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தலைவர்களுடன் கை குலுக்கிய மைக் பென்ஸ், கிம் யோ ஜாங்குடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டார். மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் வெறும் 5 நிமிடத்திலேயே பென்ஸ் வெளியேறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து