இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அம்மாவின் அரசு தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

தமிழ் நாட்டிலேயே, முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒடி விளையாடு என்ற தலைப்பில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவ / மாணவியர்களிடையே மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகள்

மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை, நடைபெற்ற போட்டிகளுக்கு கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கி விழாப் பேருரையில் தெரிவித்ததாவது:  அம்மா , மாணவ, மாணவியர்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காக, பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். குறிப்பாக கணிணி அறிவினை வளர்த்து;ககொள்ள ஏதுவாக விலையில்லா மடிக்கணிணி, வீட்டு அருகில் இருந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக விலையில்லா மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தினார்கள். இது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை தமிழகத்தில்  அம்மா  செயல்படுத்தினார்கள். மேலும், மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல், விளையாட்டு போட்டிகளிலும்   கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களது திறமைகளை வெளிபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.  அம்மா  கடந்த 5 ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மேலும்,  அம்மா அவர்களின் அரசு, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெறும் வீரர்வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடி பரிசு தொகையும், வெள்ளி பதக்கம் பெறும் வீரர்வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடி பரிசு தொகையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தப்பட்டது. அவ்வழியாக செயல்படும்  தமிழ்நாடு முதலமைச்சர் , மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்கப்படுத்திட மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்திட ஆணையிட்டுள்ளார்கள். இன்று நமது மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவ  மாணவியர்களிடையே விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.இதில் சுமார் 1061 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டம், கல்வியில் சிறந்து விளங்குவதை போல், விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்க வேண்டும். மேலும், எதிர் வரும் தேர்வுகளில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதல் நிலை அடைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.  முன்னதாக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் , கலெக்டர் முன்னிலையில் நடைபெற்ற  மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சரவணன்., மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.சேகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தீர்த்தோஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், பெருமாள், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து