முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த குரூப்-4 தேர்வு கலெக்டர் இல.சுப்பிரமணியன், ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      விழுப்புரம்

 விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.ஆர். பொறியியல் கல்லூரி, மற்றும் நாஹர் பப்ளிக் (சி.பி.எஸ்.சி.) பள்ளி ஆகிய இடங்களில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம்  நடைபெற்ற குரூப்-4 போட்டி எழுத்துத் தேர்வினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இவ்வாய்வின்போது, கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-ஐஏ பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு  நடைபெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டங்களில் 243 தேர்வு மையங்களில் 98735 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இத்தேர்வினை விழுப்புரம் வட்டத்தில் 24204 தேர்வர்களும், செஞ்சி வட்டத்தில் 6098 தேர்வர்களும், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 12192 தேர்வர்களும், சங்கராபுரம் வட்டத்தில் 4660 தேர்வர்களும், திண்டிவனம் வட்டத்தில் 9827 தேர்வர்களும், திருக்கோவிலூர் வட்டத்தில் 6410 தேர்வர்களும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 6074 தேர்வர்களும், வானூர் வட்டத்தில் 4441 தேர்வர்களும், சின்னசேலம் வட்டத்தில் 4098 தேர்வர்களும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 1388 தேர்வர்களும், மரக்காணம் வட்டத்தில் 1429 தேர்வர்களும், மேல்மலையனூர் வட்டத்தில் 1351 தேர்வர்களும் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் 3359 தேர்வர்களும் தேர்வு என மொத்தம் 85531 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். 13204 நபர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வில் கலந்துகொள்ளும், தேர்வர்களுக்கென போக்குவரத்து வசதி, மின்வசதி, பாதுகாப்பு வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு, தேர்வு நல்ல முறையில் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து