முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி எனது நண்பர்: ஷாகித் அப்ரீடி

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கராச்சி : ஐஸ் கிரிக்கெட் டி-20 தொடரில் சேவாக் அணியை வீழ்த்திய அணியின் கேப்டன் ஷாகித் அப்ரீடி, தொடர் சதங்களை எடுத்து வரும் இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து பெரிய அளவில் பாராட்டுதலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷாகித் அப்ரீடி கூறியதாவது:

விராட் கோலி அபாரமாக பணியாற்றி வருகிறார். கட்டுப்பாட்டுடன் இருந்தால் ஆக்ரோஷம் பற்றி எனக்கு பிரச்சினை எதுவுமில்லை. விராட் கோலியின் குணாதிசியம் மகேந்திர சிங் தோனியை ஒப்பிடும்போது வித்தியாசமானது. தோனி அமைதியானவர், நிதானமானவர்.

திடீரென ஒரு நபர் தனது உள்ளார்ந்த இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது, ஆனால் கோலி தன்னுடன் தன் அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வதுதான் அவரது மிகப்பெரிய சொத்து.

கோலி ஒரு அருமையான மனிதர், என்னுடைய ஃபவுண்டேஷனுக்கு அவர் தனது ஜெர்சியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடையாக அளித்தார்.

நான் எப்போது கோலியிடம் பேசினாலும் சக மனித உணர்வு மிகவும் நெகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல, அவ்வப்போது அவர் குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு, அவர் திருமணத்துக்கு சமீபத்தில் நான் வாழ்த்து தெரிவித்தேன்.

இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான உறவு இருநாடுகளுக்குமான உறவு மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் நானும் கோலியும் உதாரணமாக அமைய முடியும். பாகிஸ்தானுக்குப் பிறகு என்னை அதிகம் பிடிக்கும் இரு நாடுகள் ஒன்று இந்தியா, மற்றொன்/று ஆஸ்திரேலியா. இவ்வாறு கூறினார் அப்ரிடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து