ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      சினிமா
K Balachander 2018 02 12

சென்னை, மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று யூகோ வங்கி ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகம் ஆகியவை ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.பாலச்சந்தரின் குடும்பம் ரூ1.36 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் யூகோ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது. கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம் வெளிப்படுத்தியுள்ளது.  இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு வந்துவிட்டது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து