கோயில் நிலங்களை மீட்க 6 வாரத்தில் குழு: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      தமிழகம்
High Court Madurai Branch 2017 9 7

மதுரை, தமிழகத்தில் கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 6 வாரத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக முத்துசாமி மற்றும் அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

அதில், கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக 6 வார காலத்துக்குள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசால் அமைக்கப்படும் குழு, தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு, சந்தை விலைப்படி குத்தகை அல்லது வாடகைத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சந்தை விலைப்படி நிர்ணயிக்கப்படும் புதிய தொகையை ஏற்போருக்கு மட்டுமே தொடர்ந்து வாடகை அல்லது குத்தகைக்கு விட வேண்டும். புதிய தொகையை ஏற்க மறுப்பவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு பொது ஏலத்தில் விட வேண்டும்.

கோயில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதனை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்பதற்கு அறநிலையத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ள நிலையில், கோயில் நிலங்களை மீட்பதில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து