குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் வசதி: கலெக்டர் கந்தசாமி ஏற்பாடு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
photo004

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்டுள்ள பேட்டரி கார் வசதியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கிவைத்தார்.

பேட்டரி கார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை மாற்றுததிறனாளிகளுக்கான உதவிகள் சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் மாற்றுததிறனாளிகளுக்கு உடனுக்குடன் உதவிகளையும் உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு சிரமமில்லாமல் வந்து செல்ல வசதியாக கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலகம் வரை பேட்டரி கார் வசதியை நேற்று காலை கலெக்டர் கந்தசாமி தொடங்கிவைத்தார். இந்த வசதி மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பேட்டரி கார் வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து