முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி: ஆஸி. வீரர் வார்னருக்கு ஓய்வு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வரும் வார்னருக்கு ஓய்வு கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடருக்காக கேப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் துணைக் கேப்டன் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 2-வது போட்டி நேற்று முன்தினம் மொல்போர்னில் நடைபெற்றது. இதன்பின் ஆஸ்திரேலியா வருகிற 16-ந்தேதி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நியூசிலாந்தில் நடக்கிறது. இரண்டு போட்டிகளுக்கும் இடையில் சுமார் 6 நாட்கள் இடைவெளி உள்ளதால் வார்னருக்கு இடைப்பட்ட நாளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆலன் பார்டர் விருது வழங்கும் விழா மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. அதன்பின் சொந்த நகரான சிட்னிக்கு செல்கிறார். சிட்னியில் ஓய்வெடுக்கும் வார்னர் நியூசிலாந்துக்கு எதிராக 16-ந்தேதி நடக்கும் போட்டிக்கு முன் அணியுடன் இணைகிறார்.

இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் லீமென் கூறுகையில் ‘‘அவருக்கு சில நாட்கள் ஓய்வு கொடுத்துள்ளோம். இது சவாலானதுதான். ஆனால், அணிக்கு திரும்பியதும் வார்னர் கேப்டனாக செயல்படுவார். இதனால் ஓய்வு முடிந்து போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் நியூசிலாந்து செல்வார்’’ என்றார்.

தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்து வரும் வார்னர் கடைசி 8 இன்னிங்சில் 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து