முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரோவில் பொன் விழா பிரதமர் மோடி 24-ந் தேதி புதுவை வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி அருகே அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பொன்விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் வருகை

இதில் பங்கேற்கும் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கு பிரதமர் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எந்த தேதியில் வருவார் என்று உறுதி படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி பிரதமர் புதுச்சேரி வருவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது. இந்த தகவலை பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் தெரிவித்தார். புதுவை வரும் மோடி கட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை பொதுக் கூட்டமாக நடத்துவதா? அல்லது வேறு நிகழ்ச்சியாக நடத்துவதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று சாமிநாதன் தெரிவித்தார். புதுவையில் துறைமுக சரக்கு முனையம் திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் கலந்து கொள்ளும்  படி பிரதமருக்கு புதுவை அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா? என்பது குறித்து ஒரு தகவலும் தெரியவில்லை. இதுபோல ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சேதராப்பட்டில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.900 கோடி செலவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். இதிலும் பிரதமர் பங்கேற்பாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமரின் முழு சுற்றுப்பயண விபரம் இன்று தெரிய வரும் என்று சாமிநாதன் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து