குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      சென்னை

குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூரை அடுத்த இரண்டாம்கட்டளை ராகவேந்திரா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). கடந்த 10-ந்தேதி கணவன்- மனைவி இருவரும் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த வாலிபர் திடீரென ஜெயஸ்ரீ அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து ஓட்டம் பிடித்தான். இதில் ஜெயஸ்ரீ கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், கொள்ளையனை விரட்டிச் சென்றார். ஆனால் அவன், சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டான். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளையன் கைது

கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது நகை பறிப்பில் ஈடுபட்டது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சை என்பவரது மகன் சிவா (19), அவனது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் (23) என்பது தெரிந்தது. நகை பறிப்பில் ஈடுபட்ட காட்சி பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் வெளியானதையடுத்து இருவரும் புதுச்சேரி, வில்லியனூரில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவாவை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த சாலமன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பிடிபட்ட சிவாவிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவன் மீது கடந்த 2016-ம் ஆண்டு அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் 2 நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. அவன் கூட்டாளி சாலமனுடன் சேர்ந்து சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டு உல்லாச செலவு செய்து வந்து உள்ளான். கேமிராவில் பதிவான காட்சியில் இப்போது அவன் சிக்கி விட்டான். திருவேற்காடு, பெருமாள் அகரம் வி.ஜி.என். அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சொர்ணம். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் பணி முடிந்து பெருமாள் அகரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சொர்ணம் அணிந்து இருந்த 10 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து