முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூளைக் காயம் மற்றும் வீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 வயதுச் சிறுமியை காப்பாற்றி மறுவாழ்வு அளித்த அப்பல்லோ மருத்துவமனை

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      சென்னை

ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை தன்யஸ்ரீ என்ற 4 வயதுக் குழந்தையின் மூளையைப் பாதுகாத்து மறுவாழ்வு அளித்துள்ளது. அதி தீவிர நரம்பியல் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சிகிச்சை மட்டும் போதாத நிலை ஏற்பட்டபோது டீகம்ப்ரசிவ் க்ரானியக்டமி எனப்படும் சிறப்பு அறுவை சிகிச்சை நடைமுறை மேற்கொள்ளப்பட்டு அந்த குழந்தை பாதுகாக்கப்பட்டது.

மறுவாழ்வு

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு, மிக ஆபத்தான நிலையில் குழந்தை தன்யஸ்ரீ கொண்டுவரப்பட்டார். அந்த குழந்தை வசிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர் இரண்டாவது தளத்தில் இருந்து அந்தக் குழந்தை மீது விழுந்ததில் குழந்தைக்கு கடும் காயங்கள் ஏற்பட்டன. தன்யஸ்ரீ-க்கு கடுமையான மூளைக் காயங்களும் உடலில் சிறிய காயங்கள் மற்றும் எலும்பு முறிவும் இருந்தன. ஷஃபி முகமது சாலையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மிக ஆபத்தான நிலையில் அந்த குழந்தை மாற்றப்பட்டது.அதிகமான வீரியத்துடன் அடிபட்டதால் அந்தக் குழந்தைக்கு மூளைக் காயம் ஏற்பட்டு மூளை வீங்கத் தொடங்கியது. அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் (பிஐசியூ) மிக அதிகபட் நரம்பியல் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும் மூளை வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. வீரியம் மிக்க பெருமூளை நீர்க்கட்டு எனப்படும் மேலிக்னன்ட் செரிப்ரல் எடெமா பாதிப்பால் இது ஏற்பட்டது. சுற்றியுள்ள மண்டை ஓட்டுப் பகுதியில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிக அதிக அளவில் ஆபத்தான முறையில் மூளை அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இன்ட்ராகார்னியல் ப்ரெஸ்ஸர் (ஐசிபி) எனப்படும் மூளை மற்றும் மண்டை ஓட்டுப் பகுதிக்குள்ளான அழுத்தம் உயர்ந்து கொண்டே சென்றது. ஐசிபி அளவானது சராசரியாக 15 எம்எம் ஹச்ஜி என்ற அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால் தன்யஸ்ரீயின் ஐசிபி (மூளை அழுத்தம்) 30 முதல் 35 எம்எம் ஹெச்ஜி வரை உயர்ந்தது. கடும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் இந்த அளவு அது உயர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து