முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ்  தலைமையில் நடைபெற்றது.

உடனடி தீர்வு

 இக்கூட்டத்தில் உடனடியாக தீர்வுகானக் கூடிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கானப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.மேலும் மாற்றுதிறனாளிகளின் வங்கி கடன் உதவி,மாத உதவித்தொகை,இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்,காதொலி கருவி,செயற்கை கால்,செயற்கை கை, மூன்று சக்கர சைக்கிள்,மடக்கு சக்கர நாற்காலி போன் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 550 மனுக்களை மாவட்ட கலெக்டர் அவர்களிடம் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர்   சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக் குறைதீர்க்கும் கூட்டம் இனி மாதம் ஒருமுறை நடைபெறும் எனவும் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ்  தெரிவித்தார்.       இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏ.மலர்கொடி, வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் முத்துமீனாட்சி, மன்னார்குடி செல்வசுரபி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள்நலத்துறை அலுவலர் ரவீந்திரன் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து