முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழக்கரை அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குளபதம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 62 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிலையிலான அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாக  மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்  விளக்கி கூறப்படுகிறது. 
இம்முகாம் குறித்து இக்கிராம பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மொத்தம் 89 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்;வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய முகாமில் தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்து மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.12லட்சத்து 40ஆயிரத்து 654 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
 இதுதவிர,  கீழக்கரை வட்டம், குளபதம் ஊராட்சியில் உள்ள யாதவர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு ரூ.22.40 லட்சம் மதிப்பிலும், குளபதம் கிராமத்தில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு ரூ.12.19 லட்சம் மதிப்பிலும் மற்றும் நத்தம் கிராமத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அமைப்பதற்கு  ரூ.4.28 லட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.38.87 லட்சம் மதிப்பில் 3  பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 2018-2019ஆம் நிதியாண்டிற்குள் பணிகள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மேலும் மத்திய அரசின் மூலம், விஷன் 2022 திட்டத்தின் கீழ், இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்நிலை மேம்பாடு, அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக உருவாக்கிடும் வகையில் நூறு சதவீதம்  தனிநபர்  இல்லக் கழிப்பறைகள்  கட்டுவதற்கான நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சிறு தொழில் துவங்க விரும்பும் நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் பிணையமின்றி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும்  17.02.2018 வரை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பகுதி வாரியாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாம்களை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத்தொடர்ந்து, குளபதம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக சென்று குழந்தைகளுக்கு வழங்கும் மதிய உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 இம்முகாமில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், மாவட்;ட வழங்கல் அலுவலர் மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா­, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், தாட்கோ மேலாளர் செல்வராஜ் உட்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து