முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்   நடைபெற்றது. 
  இம்முகாமில் மூன்று சக்கர வண்டி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டி மொத்தம் 454 மனுக்கள் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டது.  இதில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்க்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 26 மாணவ, மாணவிகளுக்கு ரூ.39000 மதிப்பிலும், 8 நபர்களுக்கு பிரெய்லி கடிகாரம் ரூ.12000 மதிப்பிலும், 2 நபர்களுக்கு உருப்பெருக்கி ரூ.11000 மதிப்பிலும் என மொத்தம் 36 நபர்களுக்கு ரூ.62000 மதிப்பிலான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  .பிரம்மநாயகம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.சாந்தா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து