மெய்யூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்;:பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா : கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
Tvalllur photo1

திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், மெய்யூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் அரசு நலத்திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் திட்ட விளக்கவுரை மூலம் தெரிந்துகொண்டு பயனடைய வேண்டும்.

சான்றிதழ்

 முகாமில் மாற்றுத்திறனாளிகள் உதவிக்தொகைக்கான ஆணைகளையும், முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும்,புற்றுநோய் உதவித்தொகைக்கான ஆணைகளையும், விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், கிராம நத்தம் பட்டா நகல் , பட்டா மாற்றம் முழுபுலம்,பட்டா மாற்றம் உட்பிரிவு,கிராம நத்தம் பட்டா,வாரிசு சான்று, ஒருங்கிணைந்த சான்று,பயனாளிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர் சான்றுகளையும்,பயனாளிகளுக்கு விதவைச் சான்றுகளையும், ஆதிதிராவிடர் இனச்சான்று, சிறு, குறு விவசாயி சான்று , சமூக நலத்துறையின் கீழ் இரண்டு பெண்குழந்தைகளுக்கான உதவித்தொகை, வேளாண்மைத்துறை சார்பாக மானிய விலையில் சோலார் விளக்கு பொறிகளும், மானிய விலையில் உயிர் உரங்களையும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால்,மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி ஆகியோர் வழங்கினார்கள்.

பின்னர், மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு உரிய தீர்வுகளை விரைந்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சீ.ஜானகிராமன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) மா.நாராயணன்;,பூவிருந்தவல்லி வட்டாட்சியர் ரமா, திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எம்.சின்னசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜி.திருநாவுக்கரசு,முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் ரவீந்திரநாத், பூந்தமல்லி வேளாண்மை உதவி இயக்குநர் சுமதி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.ஜெயசந்திரன்,மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செந்தில்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசப்பிரமணியம்,சவுகத்துல்லா,முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெகதா ஜேம்ஸ்,ஊராட்சி செயலர் தாமோதரன்,பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து