புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்தில் கலெக்டர் சு.கணேஷ் ஆய்வு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      புதுக்கோட்டை
pro p kottai

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், இடையாத்தூரில் இன்று (15.02.2018) அன்று நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சு.கணேஷ். நேற்று (14.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்த ஆய்வில் பார்வையாளர்கள் அமரும் இடம், விழா மேடை, வாடிவாசல், காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் இடம், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம், காளைகள் செல்லும் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் மற்றும் காவல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு விதிமுறையின் படி சிறப்பாக நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சு.கணேஷ். உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.மோகன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்; ஜெயபாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன், வட்டாட்சியர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து