தஞ்சாவூர் மாவட்டம் வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   தலைமையில் இன்று (15.02.2018) நடைபெற்றது. 

மனு நீதி நாள் முகாம்

 இம்முகாமில் சட்டப் பணி ஆலோசனைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நக்கீரன்  முன்னிலை வகித்தார்.இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   கலந்து கொண்டு வருவாய்த்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 26 பயனாளிகளுக்கு விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு  ரூ.1,97,000 மதிப்பிலான உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,450 மதிப்பிலான உதவிகளையும்,  ஆக மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.11,31,450 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் அந்தந்த கிராமங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.  முதல் முறையாக தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையக்குழு பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக முகாம் அமைத்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் தொடர்பான சட்ட சிக்கல்கள் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை ஆலோசனை பெற்று பயன் பெற்றுக் கொள்ளலாம்.தற்போது நடைபெற்று வரும் வைத்தியநாதன்பேட்டை அரசு பள்ளியானது சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்;டுக்குரியதாகும். மாநில அளவில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற்று நமது தஞ்சாவூர் மாவட்டம் 17வது இடத்தினை பெற்றுள்ளது.  வருடாவருடம் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.கிராமப்புற சுகாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் நமது சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பெண்களால் மட்டும்; தான் செய்ய முடியும்.  ஒரு மாதத்திற்கு முன்பாக மக்கள் நேர் காணல் முகாம் குறித்து அறிவிக்கப்பட்டு,  பொது மக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 மனுக்கள் தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  இன்று  பெறப்பட்ட 100 மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் மனு மீது எடுக்கப்பட்ட தீர்வு மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.  இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை,   தெரிவித்தார்.இம்முகாமையொட்டி செய்தித்துறை, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள்  ஆணையக்குழு,  வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறு புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன்,  திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், சட்டப் பணி ஆலோசனைக்குழு உறுப்பினர் சார்பு நீதியரசர் சாந்தி,    தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,  வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பேரூராட்;சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன்,  வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஜஸ்டின்,  இணை இயக்குநர்  கால்நடைத் துறை இணை இயக்குநர் மாசிலாமணி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரவிச்சந்திரன்,  பயிற்சி துணை கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், வட்டாட்சியர் லதா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து