முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.65 கோடியில் புதிய கட்டிட பணி: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.2.65கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை போட்டு துவக்கி வைத்தார்.
 சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. சுமார் 40ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கட்டிடம் தற்போதைய நிர்வாகத்திற்கு ஏற்றவகையில் இல்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று தமிழக அரசிற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டி அரசு ரூ.2கோடியே 65லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது செயல்படும் கட்டிடம் அருகில் புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை போட்டு துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, மேலாளர் அறை, கணினி அறை என்ற ஒருங்கிணைப்போடு அலுவலகம் கட்டப்பட உள்ளது. பூமிபூஜை விழாவில் ராதாகிருஷ்ணன் எம்பி, கலெக்டர் சிவஞானம், மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்தியமூர்த்தி, அதிமுக ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ், அம்மா பேரவை எதிர்கோட்டை மணிகண்டன், மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து