விஐடியில் ரிவேரா 4நாள் சர்வதேச கலை மற்றும் விளையாட்டுவிழா இந்தியகிரிகெட் வீரர் கவுதம் கம்பீர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      வேலூர்
VIT

 

விஐடியில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-18 என்கிற சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழா இன்று தொடங்கியது.இதனை இன்று காலை இந்திய கிரிக்கெட்வீரர் கவுத்தம் கம்பீர் தொடங்கி வைத்துவிழாவயொட்டி நடத்தப்பட்ட மாரத்தான்ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கினார். 18 ந் தேதி மாலைநடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி படபுகழ் நடிகர் ராணா டக்குபத்தி பங்கேற்றுபரிசுகள் வழங்க உள்ளார்.

விளையாட்டு விழா

விஐடியில் ஆண்டு தோறும் வண்ணமயமாகவெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும்ரிவேரா என்கிற சர்வதேசஅளவிலான கலைமற்றும் விளையாட்டு விழா இன்றுதொடங்கியது. 18 ந்தேதி வரை தொடர்ந்து 4நாட்கள் இது நடைபெறுகிறது. இதில்ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை,பங்களாதேஷ், ஜெர்மனி, சிங்கப்பூர், பூடான்,உகாண்டா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, பிரான்சு,ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் உள்ளிட்ட24 நாடுகளிலிருந்தும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 400க்கும்மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.

ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல்,வாலிபால், டென்னிஸ், தடகளம்,பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16விதமான விளையாட்டு போட்டிகளும்நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை,கட்டுரை போட்டிகள், பல்வேறுதலைப்புகளில் கருத்தரங்கம், விவாதஅரங்கம், வடிவமைப்பு ,குறும்படம்தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்வுகள்இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையாக ரூ. 20 லட்சம்வழங்கப்படுகிறது.

ரிவேரா கலை விழா தொடக்க விழா இன்றுகாலை விஐடி கல்பனா சாவ்லாமைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை ரிவேரா மாணவர் குழுஅமைப்பாளர் மாணவி ரிஷ்பா ராகவ்வரவேற்றார்.விளையாட்டு அறிக்கையைவிளையாட்டு குழு அமைப்பாளர் மாணவிசிரி சந்திரா விளக்கி கூறினார்.

வேந்தர் பேச்சு

நிகழ்ச்சிக்குவிஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதன் தலைமை வகித்துபேசியதாவது: விஐடி ஆண்டுதோறும் புதுமையைஉருவாக்கி வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த ரிவேரா நிகழ்வுஇதற்கு முன்பு நடந்த ரிவேரா நிகழ்வுகளைமுந்தியுள்ளது. கல்வி விளையாட்டு மற்றும்ஆராய்ச்சிபணிகளில் விஐடி எப்போதும்முன்னணியில் உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கவுதம் கம்பீர் சிறப்பு விருந்தினராகபங்கேற்று புறாக்களைபறக்க விட்டு ரிவேராநிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது:

விஐடி நிறுவனம் இங்கு மாணவர்களுக்குதரமான உயர்கல்வி வழங்குவதுடன்மனிதாபித்துடன் உபசரிப்பு ஆகியவை பற்றிகேள்வி பட்டுள்ளேன் இன்று அதனைநேரில் கானும் வாய்ப்புகிடைத்துள்ளது.விஐடி வளாகத்தைபார்க்கும்போது நாட்டில் நெம்பர்நிறுவனமாக இது உருவாகும் என்பதில்ஐயமில்லை.விஐடியில் பொறியியல் படிக்க வாய்ப்புகிடைத்துள்ள நீங்கள் அதனை நல்லவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறந்தபொறியாளர்களாக உருவாக வேண்டும்என்றார்.அதனை தொடர்ந்து மாணவர்கள்கேட்ட கேள்விகளுக்கு கவுதம் கம்பீர்பதிலளித்ததுடன் மாணவமாணவியருடன்செல்பி எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியையொட்டி இன்று காலைநடத்தப்பட்ட 9.9 கி.மீ தூர மாரத்தான்ஒட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில்எத்தோப்பியா நாட்டை சேர்ந்த மி கியாஸ்முதலிடத்திலும் வாணியம்பாடி இஸ்லாமியாகல்லூரி மாணவர் சந்தோஷ் இரண்டாவதுஇடத்தையும் கோட்டையம் செயின்ட் ஸ்டிபன் கல்லூரி மாணவர் பினு பீட்டம்மூன்றாடமிடத்திலும் வெற்றி பெற்றனர்.

பெண்கள் போட்டி

பெண்களுக்கான போட்டியில் திருச்சிஜென்னிஸ் கல்லூரி மாணவி கலைச் செல்வி முதலிடம், எம்.வனிதா இரண்டாமிடம்,மற்றும் விஐடி முன்னாள் மாணவி கொச்சியின் மரினா மாத்யூ மூன்றாமிடமும்பெற்றனர். இவர்களுக்கு கவுதம் கம்பீர்பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றகவுதம் கம்பீருக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் பொண்ணாடை அணிவித்துநினைவு பரிசு வழங்கினார்.இதில் துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல்இணை துணைவேந்தர் முனைவர்எஸ்.நாராயணன் மாணவர் நலன் இயக்குநர்முனைவர் அமித் மகேந்திரக்கர் ரிவேராகலை விழா அமைப்பாளர் முனைவர்எஸ்.சசி குமார் ஆகியோர்பங்கேற்றனர்.முடிவில் மாணவி எசித்தா சிங்நன்றி கூறினார்.

நாளை 16ந் தேதி நடைபெறும் இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் திரை இசை பின்னணிபாடகர்கள் விஜய் பிரகாஷ் சைந்தவிஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும்இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விக்ரம்வேதா தமிழ் படம் இயக்குநர்கள் புஷ்கர்மற்றும் காயத்திரி மெகபூபா தெலுங்கு படஇயக்குநர் பூரி ஜெகநாத் சாகா மற்றும்மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியாசாரதா ஸ்ரீநாத் சர்மி இசையமைப்பாளர்எஸ்.எஸ்.தாமன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆண்அழகன் பட்டம் பெற்ற தாரா சிங்கும்பங்கேற்கிறார்.

18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவுவிழாவில் பாகுபலி பட புகழ் தெலுங்குநடிகர் ராணா டக்குப்பத்தி சிறப்புவிருந்தினராக பங்கேற்று ரிவேரா யொட்டிநடத்தப்படட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.

 

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து