முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நலத்துறையின் சார்பில் குழந்தை பாலின விகிதத்தை குறைப்பதற்கான பயிற்றுநர் பயிற்சி வகுப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

 தேனி -தேனி மாவட்டம், சமூகநலத்துறையின் சார்பில் குழந்தை பாலின விகிதத்தை குறைப்பதற்காக சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட அலுவலர்களுக்கான பயிற்றுநர் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர்  .ந.வெங்கடாசலம்,   தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.
சமூகநலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பயிற்றுநர்களுக்கு துண்டு பிரசுரங்கள், வட்டார அளவிலான ஆண், பெண் பிறப்பு குறித்த புள்ளி விவர படங்கள், 75 ஸ்கேன் சென்டர் பட்டியல் வழங்கியும் பயிற்சி அளிக்கப்பட்டது. 
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,                        
                          ஆண், பெண் பிறப்பு விகிதமான 1000 ஆண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பதனை வைத்து பிறப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, நமது மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 980 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. இதனை குறைப்பதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
பெண் குழந்தைகள் பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகள் என்றால் பொருளாதார இழப்பு என்ற தவறான கருத்தினை போக்கி, பெண் சிசுக்கொலையினை தடுத்திட பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அலுவலர்கள், சுகாதார, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களிடம் நெருக்கத்தினை ஏற்படுத்தி பெண் கல்வியினை ஊக்கப்படுத்தி பெண்களுக்கு அரசின் சார்பில் வேலை வாய்ப்பில் வழங்கப்படும் பங்களிப்பினை விளக்க வேண்டும். அதே போல் குழந்தை திருமணம் செய்வதை தடுத்திட 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பள்ளிக்கல்வியினை இடைநிறுத்தம் செய்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியான பின்பு உடலளவிலும், மனதளவிலும் பக்குவப்பட்ட பின்பே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். பெண்கள் கல்வி கற்பதினால் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தங்களால் வருமானம் ஈட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையினை ஏற்படுத்திட வேண்டும்.
 பணியாளர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களை கண்காணித்து முறையான தடுப்பூசி போட ஆலோசனை வழங்க வேண்டும். தங்களது பகுதிகளில் உள்ள ஸ்கேன் சென்டர்களை ஆய்வு செய்து கருக்கலைப்பு செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாதாந்திர அறிக்கை தர வேண்டும். குழந்தைகள் எவ்வித குறைபாடும் இல்லாமல் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஸ்கேன் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகளால் கருவிலிருக்கும் சிசு என்ன பாலினத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இதனைத்தடுத்திட தொடர்ந்து சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளிடம் குழந்தைத்திருமணம், பெண்கல்வி, மற்றும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்;டம் போன்றவற்றை எடுத்துக்கூறியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், மற்றும் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
 
இப்பயிற்சியில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.திருநாவுக்கரசு  உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து