செங்குன்றம் அருகே பா.ஜ.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      சென்னை

 

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் சோழவரம் காவல் உதவி மையம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் பா.ஜ.க பிரமுகர். சென்னை வானகரத்தில் உள்ள மீன் மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

புழல் ஜெயில்

இவருடை மனைவி செவத்தியம்மாள் (வயது 45). இவர் சென்னை சர்மா நகருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தின இரவு 7 மணியளவில் பாலகிருஷ்ணனும் பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் அவரது மகள் பவித்ராவும் வீட்டில் இருந்தனர். கொளை முயர்சி, வழிபறி ஆகிய வழக்குகளில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரவுடி மதிவாணன் கடந்த 6-ந் தேதி ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தின இரவு மதிவாணனும் அவனது கூட்டாளிகள் பாலா (வயது 18), அருள், சுரேந்தர் ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் 2 பட்டாகத்திகளுடன் கத்தியை சாலையில தேய்த்தவாறு காவல் உதவி மையம் அருகே இருந்து தரையில் தேய்த்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடினர். பா.ஜ.க பிரமுகர் பாலகிருஷ்ணன வீட்டின் முன் நிறுத்திய போது பாலகிருஷணனும் அவரது மகளும் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர். உடனே என்ன பார்க்குறீர்கள் என வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கினர் உடனே பாலகிருஷ்ணன் கத்தினார்.

மதிவாணன் எதற்காக கத்துகிறாய் என கத்தியை எடுத்து பாலகிருஷ்ணன் கால்களில் கத்தியை திருப்பி வெட்டியதாக கூறப்படுகிறது. இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்ட பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உடனே இருவரும் கேட்டை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்று ஒலிந்துக்கொண்டனர். உடனே அந்த 4 ரவுடிகளும் அங்கிருந்த சீமை ஓடுகளை எடுத்து பாலகிருஷ்ணன் வீடு மீதும் மற்றும் அங்கிருந்த வீடுகள் மீதும் அடித்தனர். பின்பு அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் அபிமண்ணன் விரைந்து வந்து ஆட்டந்தாங்கல் பகுதியில் ஒலிந்திருந்த ரவுடிகள் மதிவாணண், பாலா ஆகிய 2 பேரை சுற்றிவலைத்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 பட்டாகத்திகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சுரேந்தர், அருள் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை எண்ணுர், சர்மாநகர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் நாகாத்தம்மன் நகர், அம்பேத்கர் நகர், சோலையம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் இவர்களுடைய அட்டூழியம் தாங்க முடியவில்லை. சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து