டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் 7வது தேசிய கருத்தரங்கு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்
T J S  Colloge

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் குடிமுறை பொறியியல் துறை சார்பாக 7வது தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கு டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியின் குடிமுறை பொறியியல் துறை சார்பாக நடைபெற்ற ஹூவர்-2018 என்கின்ற 7வது தேசிய கருத்தரங்கிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கு

செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.பழனி வரவேற்றார். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக ஷீவிங் ஸ்டெட்டர் இந்தியா நிறுவன மனித வள பொது மேலாளர் கிஷோர் பாபு கலந்துக் கொண்டு மாணவர்களிடையே பேசும் போது மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், புத்தகம் படிக்கும் பழக்கத்தை பொழுதுபோக்குகளில் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், திட்டமிட்ட செயல்பாடும், திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பும், செய்யும் செயலை முடிக்க வேண்டும் என்ற மனோதிடமும் பெறும் போது அவர்களால் வெற்றி பெற இயலும் என்றும், வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு எளிதில் கிடைக்க அவர்களது வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவதோடு, மொழி திறனையும், பேச்சு திறனையும் பெற்றிட வேண்டும் என்றார்.

இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 60 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றனர். இதில் 70 ஆராய்ச்சி கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்ததில் தேர்வான 50 கட்டுரைகள் அடங்கிய புத்தகம் நிகழ்வில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த கருத்தரங்கில் கிராமத்தை நகர சூழலுக்கு அதன் இயற்கை தன்மை மாறாமல் மேம்படுத்துதல், சுழலும் பாலம், குறைந்த முதலீட்டில் செங்கல் மற்றும் டைல்ஸ்களை அதிக தரத்தோடு தயாரித்தல் மேம்படுத்தப்பட்ட தடுப்பணை மாதிரி போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எஸ்.என்.எஸ். இன்ப்ரா பிராஜக்ட்ஸ் நிறுவன திட்ட பொது மேலாளர் கே.சந்திரன் கலந்துக் கொண்டு பரிசளித்து பாராட்டினார்.

மேலும் விழாவில் 24 மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி செய்ய வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டது. கருத்தரங்கு முடிவில் குடிமுறை பொறியியல் துறை தலைவர் எஸ்.சிவசந்திரன் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான எம்.ராஜா, ஆர்.ராஜி உள்ளிட்ட விரிவுரையாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து