முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் மின்சாரம் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (16 ம்தேதி ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சி.ஐ.டி.யூ அறிவித்துள்ளது, இந்த நிலையில்தமிழ்நாடு மின்வாரிய அலுவலத்தில் நேற்று மாலை மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

3 சங்கங்கள் ஸ்டிரைக்
மின்வாரியத்தில் மொத்தம் 17 சங்கங்கள் இருக்கின்றன. அதில், தி.மு.க, ஐ.என்.டி.சி உட்பட 14 சங்கங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிற வகையில் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், சி.ஐ.டி.யூ, பி.எம்.எஸ், என்.எல்.ஓ ஆகியமுன்று சங்கங்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

சுமூக முடிவு
நாளையோ (இன்று), நாளை மறுநாளோ(நாளை) பணிச்சுமை குறித்த ஒப்பந்தத்தை முடித்தபிறகு புதன்கிழமைக்குள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும். அவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்க அரசு தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு சில சங்கங்கள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே (இன்று) வேலைநிறுத்தம் என்று அறிவித்து விட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் தான் நானாக இருந்தாலும். அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் சம்பளம் வாங்குகிறோம். எனவே, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வேலைநிறுத்தில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென்று நான் அழைக்கிறேன். சி.ஐ.டி.யூவை பொருத்தவரையில் இடைக்கால நிவாரணம் கொடுக்கும் கூட்டத்திற்கு கூட அவர்கள் வரவில்லை. கூட்டத்திற்கு கூட வராமல் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

கைவிட வேண்டும்
அடுத்தவாரத்திற்குள் முழுமையான ஒப்பந்தம் முடிந்துவிடும் என்ற நோக்குடன் பெரும்பாலான சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அமைச்சர் முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறினார்கள். அரசு திறந்த மனதோடு இருக்கிறது என்று பலமுறைநான் கூறியுள்ளேன். ஆகவே, நாளை (இன்று) தினம் நடைபெறும் வேலைநிறுத்ததை கைவிடவேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தயார் நிலையில் அரசு
அதையும் மீறி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்றால், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மின்சாரம் வழங்க அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த பகுதியாக இருந்தாலும், இரவு முழுவதும் அதிகாரிகளோடு இடைநிலை உதவியாளர்களோடு அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். மக்கள் யாரும் மின்சாரம் இருக்காது என்று கவலை கொள்ளவேண்டாம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிற வகையில் மக்கள் கருதி எங்களிடம் தெரிவித்தால் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊதியகுழுதான் காரணம்
காலதாமத்திற்கு 7வது ஊதியக்குழுவே காரணம் அது வந்ததிற்கு பிறகே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். மின்சார வாரியத்தில் ஓய்வூபெற்றவர்களுக்கு ரூ.1250 நிவாரணத்தொகை வழங்கியுள்ளோம். அதேபோல வேலையில் இருப்பவர்களுக்கு ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுற்ற பிறகே முழுமையாக கூறமுடியும். 14தொழிற்சங்கங்களும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி நங்கள் நிச்சயம் வேலைநிறுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று எங்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நாளை(இன்று) வேலைநிறுத்தம் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்னும் ஒர்க்லோட் செட்டில்மென்ட்  கொடுக்கவில்லை. அதை முடித்த பிறகே பேச்சுவார்தையை நடத்த முடியும். இது பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இன்னும் ஒரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து