ஜியோவுக்கு போட்டியாக இறங்கிய பி.எஸ்.என்.எல்.

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      வர்த்தகம்
5 Jio

ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேக்சிமம் பிரீபெயிட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.999க்கு கிடைக்கும் புதிய திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இந்தியாவில் வட-கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட வட்டாரங்கள் தவிர மற்ற இடங்களில் புதிய பி.எஸ்.என்.எல். சலுகை வழங்கப்படுகிறது.

புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு இதர சேவைகளும் வழங்கப்படுகிறது. அதிவேக 1ஜிபி டேட்டா நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 40 கே.பி-யாக (40Kbps) குறைக்கப்படும். புதிய மேக்சிமம் பிரீபெயிட் சலுகையை பி.எஸ்.என்.எல். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து