முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாய் வருட புத்தாண்டை கொண்டாடிய சீன மக்கள்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனாவில்  நாய் வருட  புத்தாண்டு நேற்று வெகு விமரிசையாக அந்நாட்டு மக்களால்  கொண்டாடப்பட்டது.

சுமார் 1.4 பில்லியன் சீன மக்கள் அவர்களது பாரம்பரிய நாட்காட்டியான லூனாரின் படி தங்கள் புத்தாண்டு தினத்தை உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து நேற்று கொண்டாடினர்.

அந்த நாட்டின் லூனார் நாட்காட்டியின் படி சீனாவுக்கு இது நாய் வருடமாகும். அதன்படி நாய்களை அலங்காரப்படுத்தி, பூஜை செய்து வழிபட்டனர். இந்த வருடம் சீன மக்களுக்கு அதிர்ஷ்டம் மிகுந்த வருடமாக பார்க்கப்படுகிறது.

இந்த நாளில் சீன மக்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து தங்கள் வீடுகளை அலங்காரப்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டு உற்சாகமாகப் புத்தாண்டை கொண்டாடினர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து