முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி தீர்ப்பின் சாதக, பாதகங்கள்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில்  நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களும், சில சாதகமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

பாதகங்கள்:-
கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரில் பெங்களூருக்கு கூடுதலாக 4.75 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவு. தமிழகத்திலுள்ள 20 டி.எம்.சி அளவுக்கான நிலத்தடி நீரை கருத்தில் எடுக்குமாறும் உத்தரவு. நிலத்தடி நீர் மழை அளவை பொறுத்து மாறும் என்பதால் தமிழகத்திற்கு இது பின்னடைவு.

காவிரி விவகாரத்தில் இனிமேல் மேல்முறையீடு செய்ய முடியாது. 15 வருடங்களுக்கு இந்த தீர்ப்புதான் அமலில் இருக்கும். பிறகுதான் மாற்றம் செய்ய கோர முடியும். சீராய்வு மனுவை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

சாதகங்கள்:-
சுதந்திரத்திற்கு முன்பு 1892 மற்றும் 1924ம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்கள் நடுவே காவிரி பங்கீடு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனியும் செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தப்படி பார்த்தால், தமிழக அனுமதியின்றி கர்நாடகாவால் புதிய அணைகளை கட்ட முடியாது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய கர்நாடகா கோரியிருந்தது.

மேகதாது அணை  கட்டமுடியாது
மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம்.

நதிகள் தேசியமயம்
நதிகளை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியது. காவிரி தங்கள் சொத்து என கர்நாடகா கூறிவரும் நிலையில், இந்த தீர்ப்பு அதற்கு பின்னடைவாகும். நதிகளை தேசியமயமாக்க நடைபெறும் முயற்சிகளின்போது இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து