வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      வேலூர்
wj

 

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வேப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

ஆலோசனை கூட்டம்

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு ஒன்றிய செயலாளர் தாஜ்புரா குட்டி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சிறப்புறையாற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தீர்மானம்-1: புரட்சிதலைவி அம்மா அவர்களின் 70-வது பிறந்தநாளை வெகு சிறப்பாக மாவட்ட முழுவதும் எல்லா பகுதிகளிலும் கழக கொடியேற்றி இனிப்பு, அன்னதானம் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தீர்மானம்-2: கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இரட்டை இலை மீட்டு கழகத்தை ஒற்றுமையுடன் செயல்பட்டு பணிகளை செவ்வனே செய்வது என ஏகமனதாக தீர்மானிக்கிறது. தீர்மானம்-3: கழக அறிவித்துள்ளபடி பழைய உறுப்பினர்கள் புதுப்பித்து கொள்ளவும் புதிய உறுப்பினர் சேர்த்து கிழக்கு மாவட்டம் முன்னோடியாக திகழ அயராது பாடுபடுவதென கூட்டம் தீர்மானிக்கிறது. தீர்மானம்-4: சட்டப்பேரவையில் அம்மா அவர்களின் திருஉருவ படத்தை திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட பேரவை தலைவர் தனபால் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறது. தீர்மானம்-5: முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அம்மா அறிவித்த மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர், துணை முதல்வர்க்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கிறது. தீர்மானம்-6: கட்சி பெயர் கொடி கொள்கை இல்லாமல் கொள்ளையடித்த பணத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு தினம் பொய்யை விட்டு நம் கட்சியை கைபற்றி விடலாம் என மனபால் குடித்துவரும் தினகரனை வன்மையாக கண்டிக்கிரோம். தீர்மானம்-7: ஊழலின் மொத்த குத்தகைதாரர் கருணாநிதி கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்று இருமாப்போடு பேசி வருவதையும் அம்மா அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிதற்றி வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, அப்பு, ராமு, ஒன்றிய செயலாளர்கள் பூங்காவனம், தலங்கை குப்பன், காவேரிப்பாக்கம் ராஜா, சின்னதுரை, நகர செயலாளர்கள் இப்ராகிம் கலிலுல்லா, ஜிம் சங்கர், ஜி.மோகன், என்.கே.மணி, பெல் கார்த்திகேயன், மாவட்ட சிறுமான்மை நலபிரிவு செயலாளர் அப்துல்லா, முன்னாள் நகரமன்ற தலைவர்கள் புட்டு ரகுமான், சித்ராசந்தோஷம், வேதகிரி, முன்னாள் தொகுதி முனிசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பூண்டி பிரகாஷ், பெல் தமிழரசன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து